2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில்; பொதுமக்களுக்கான நடமாடும் சேவையொன்று நேற்று சனிக்கிழமை காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப வைபத்தில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செணவிரட்ன, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட பொலிஸ் அதிகாரிகள் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது 200 பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, காணாமற் போன தேசிய அடையாளா அட்டை கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், என்பற்றுக்கான பொலிஸ் முறைப்பாட்டு பிரதிகள் உடன் வழங்கப்பட்டதுன் பல்வேறு சேவைகளும் இடம்பெற்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .