2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

உன்னிச்சைக்குளத்து நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சைக்குளத்திலிருந்து பெறும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உன்னிச்சைப்பகுதிக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், உன்னிச்சைக்குளத்தையும் பார்வையிட்டார். தற்போது இக்குளத்து நீர் வறட்சியினால் வற்றுவதால், பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

உன்னிச்சைக்குள நீர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலும் குடிநீருக்கு பயன்படுவதுடன், விவசாயத்திற்கும் பயன்படுகின்றன.
பிரதியமைச்சருடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எப்.சிப்லி, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.எல்.எம்.பரீட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .