2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பயிர்ச்செய்கைக்கான விதைகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீர் சுகாதார வேலைத்திட்டத்தின் கீழ், ஏறாவூர் பிரதேசத்திலுள்ள அல்ஜிப்ரியா பாடசாலையின் தோட்டச் செய்கைக்கான விதைகள் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியமான யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.செயினுதீன், பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா, ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக், ஏறாவூர் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஏ.எல்.பளீள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கான நீர் சுகாதார விழிப்புணர்வு தொடர்பான செயலமர்வு மேற்கொள்ளப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .