2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

பட்டதாரிகளில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 ஒக்டோபர் 16 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


பட்டதாரிகளில் ஒரு குழுவினர் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டதாரிகளுக்கான நிரந்தர அரச வேலைவாய்ப்பு நியமனத்தில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாகவும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்கிய அனைத்து பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்முனை பாலத்திற்கான நிர்மாண ஆரம்ப நிகழ்விற்கு சென்று விட்டு மட்டக்களப்பு திரும்பிக் கொண்டிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

பட்டதாரிகள் தமது கோரிக்கைளை இங்கு எடுத்துக் கூறினர்.  நிரந்தர நியமனத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் இதன்போது உறுதியளித்தார்.

இதேவேளை, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் சில பட்டதாரிகளுக்கு நாளை புதன்கிழமை நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .