2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர்

Super User   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட, சிஹாரா லத்தீப்)


சிறு தொழில் நடவடிக்கைகளின் போது - தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்கு உதவி புரியுமாறு - கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத்திடம் ஏறாவூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து கொள்றும் நோக்கில், கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில், மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்றிருந்தார்.

இதன்போதே, அமைச்சரிடம் சிறு தொழில்களில் ஈடுபடும் பொதுமக்கள் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தனர். குறிப்பாக, ஏறாவூர் பகுதியில் மரமுந்திரிகைக் கொட்டை (கஜு) உற்பத்தியில் ஈடுபடுவோர் - தாம் தொழில் ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் விபரித்தனர்.

தமது உற்பத்திப் பொருளை சிறந்த முறையில் விற்பனை செய்வதற்குரிய சிறந்த சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, பாய் மற்றும் பனை உற்பத்திப்பொருட்களை தயாரிக்கும் சிறுதொழில் நடவடிக்கையாளர்களும் தமது தொழில் ரீதியான பிரச்சனைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கியதோடு, தொழிலுக்கான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சிரமங்கள் குறித்தும் எடுத்துக் கூறினர்.

மேற்படி பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் ஹாபிஸ் நஸீர் - இவை தொடர்பில் கூடிய விரைவில் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். இதன்போது, விசேட தேவையுடையோர் எதிர்நோக்கும் இடர்கள் குறித்தும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .