2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

கிழக்கு தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விசேட கூட்டம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 23 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ரி.லோஹித்)

கிழக்கு மாகாண சபை தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக விசேட கூட்டமொன்று வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்டலடியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டு கிழக்க மாகாண தேர்தலில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

இதேவேளை, இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சேலை மற்றும் வேஷ்டிகள் வழங்கப்பட்டதாக அவரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .