2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

விவசாயிகளை ஊக்குவிக்க உபகரணங்கள், பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சிஹாரா லத்தீப்)


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கும் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, அபிவிருத்தி கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்;டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மாகாண விவசாய கால்நடை அமைச்சர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில், நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத்,  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், மாகாண சுகாதார சுதேச மருத்துவ தொழில்நுட்ப கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.மன்சூர், மாகாண அமைச்சின் செயலாளர்  கே.பத்மநாதன் மற்றும் விவசாய, கால்நடை உற்பத்தி சுகாதார, மீன்பிடி, திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாகாண அமைச்சின் விவசாய திணைக்களம் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகள், பணப்பரிசில்களை வழங்கி கௌரவித்ததுடன் தெளி கருவிகள், சோளம் விதைகளையும் அன்பளிப்பு செய்தது.

இதேவேளை, கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு பசும்பால் அருந்துவதை ஊக்குவிக்க பால் காய்ச்சும் உபகரணங்களும்; சேதனப்பசளை சிறந்த உற்பத்தியாளர்களுக்கு ஊக்குவிப்பு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.  





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .