2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் சுத்தமான குடிநீர் வழங்கல் தொடர்பான தேசிய மாநாடு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சினால் வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகித்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான ஒருநாள் தேசிய மாநாடு நேற்று மட்டக்களப்பு மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் வழிகாட்டலில் யுனிசெப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இம்மாநாட்டிற்கு அனுசரணை வழங்கியுள்ளன.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில்   தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபையின் மேலதிக பொது முகாமையாளர் டி.எஸ்.டி.ஜெயசிறிவர்த்தன, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் கே.இன்பராஜ், மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்மாவட்டத்தில் வரட்சி மற்றும் வெள்ளப்பாதிப்பு பிரதேசங்களில் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய குழாய் கிணறுகளை அமைப்பதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்ய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .