2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சசேல் ஜே. சிசன் இன்று புதன்கிழமை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளை சம்மேளன அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்களை அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டதுடன் குறிப்பாக முஸ்லிம்களுக்குள்ள காணிப் பிரச்சினைகள் மற்றும் காத்தான்குடியில் திண்மக் கழிவகற்றல் பிரச்சினை தொடர்பாக எடுத்துக் கூறியதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் மர்சூக் அஹமது லெவ்வை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது பள்ளிவாயல் சம்மேளன தலைவர் மர்சூக் அஹமது லெவ்வை மற்றும் சம்மேளன பிரதிநிதிகளான காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான சல்மா அமீர் ஹம்சா மற்றும் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல், சம்மேளன பிரதிச் செயலாளர் எம்.அன்சார் நளீமி, சம்மேளன பிரதிநிதிகளான  எம்.சரீப் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஜாபீர் நழீமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பையடுத்து 1990ஆம் ஆண்டு காத்தான்குடியில் 103பேர் தொழுகையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பள்ளிவாயலையும் அமெரிக்க தூதுவர் பார்வையிட்டார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .