2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

சட்டத்திற்கு முரணாக சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுருக்கு வலையின் மூலம் மீன்பிடிப்பதற்கான எந்தவித அனுமதிப்பத்திரங்களும் மாவட்ட கடற்றொழில் திஇணைக்களத்தால் வழங்கப்படாத நிலையில், சட்டத்திற்கு முரணாக இம்மாவட்டத்தில் சுருக்கு வலையின் மூலம் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

சுருக்கு வலையின் மூலம் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற பின்வரும்  நிபந்தனைகளுக்குட்பட்டிருக்க வேண்டும். அவையாவன மீன்பிடி வலை 225 மீற்றருக்குட்பட்டதாக 25 மீற்றர் ஆழத்திற்குட்பட்டதாக ஒன்றரை அங்குலத்திற்கு மேற்பட்ட கனவளவைக் கொண்டதாக  வலை, 7 கடல் மைல்களுக்கப்பால் செல்லக்கூடாதாக இருக்க வேண்டும், ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல் தடை செய்யப்படுகின்றது இத்தகைய கடற்றொழில் அமைச்சின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் மீனவர்களுக்கே சுருக்கு வலை மீன்பிடித்தலுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றது. 

இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மீனருக்காவது இத்தயை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லையெனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .