2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

பசளை பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, ஆரையம்பதி கமநல கேந்திர நிலையத்தின் ஏற்பாட்டில் பசளை பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஆரையம்பதி கமநல கேந்திர நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பசளை பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் கமநலகேந்திர நிலையங்களினால் நடாத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் இக் கருத்தரங்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் டாக்டர் ஆர்.ருசாந்தன் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட தென்னை ஆராய்ச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெகன், ஆரையம்பதி கமநல கேந்திர பெருமபோக உத்தியோகத்தர் திருமதி ஸ்ரீ பிரதீப் இனோக்கா நிசாந்தி, விவசாய போதனாசிரியைகள், கமநல அமைப்புக்களின் தலைவர்கள் மற்றம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இயற்கை பசளையை ஊக்குவிக்கும்; பொருட்டு அதற்கான விவாசய உபகரணங்களும் இதன்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .