2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

வலையிறவு ஆற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 26 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலையிறவு ஆற்றுப்பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தை இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வாவியின் வலையிறவு பாலம் அமைந்துள்ள பகுதி ஆற்றில் அடைந்த நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலமே இவ்வாறு பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் வழங்கிய தகவலினையடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் அடையாளம் காண்பதற்காகவும் பிரேத பரிசோதனைகளுக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .