2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பார ஊர்தி வீட்டுக்குள் புகுந்து விபத்து

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 27 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)
 

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தியொன்று, வேக கட்டுப்பாட்டை மீறி வீடு ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மேற்படி பார ஊர்தியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. அத்துடன், வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள அரச வங்கியொன்றும் பகுதியளவில் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
 
சம்பவத்தின் போது படுகாயமடைந்த பார ஊர்தியின் உதவியாளர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .