2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாநகரசபையில் மீளாய்வு கூட்டம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 27 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

'மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் பற்றிய வெளிப்பாடு தன்மையின் இயலளவினை கட்டியெழுப்புதல்' எனும் தலைப்பிலான செயற்திட்டத்தின் மீளாய்வு கலந்துரையாடல் ஒன்று இன்று சனிக்கிழமை காலை முதல் மட்டக்களப்பு மாநகரசபை சபா மண்டபத்தில் ஆரம்பமானது.

மார்கா நிறுவனத்தின் தலைவர் கலாநிதி அசோக குணவர்த்தன தலைமையில் நடைபெற்றஇச்செயலமர்வுக் கலந்துரையாடலில், மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையளார் சிவநாதன், கணக்காளர் திருமதி சிவராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

உலக வங்கியின் அனுசரணையில் இந்த வருட ஆரம்பம் முதல் நடைபெறும் இச்செயற்திட்டமானது,  இலங்கையில் மாநகர சபைகள், நகர சபைகள், உள்ளூராட்சி மன்றங்களில் வரவுசெலவுத்திட்ட வெளிப்படைத்தன்மைகள் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இன்றைய கலந்துரையாடலில் மாநாக உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், வரியிறுப்பாளர் சங்கத்தின் தலைவர் மாமாங்கராஜா மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய சிவில் சமூகம், ஊடகவியலராளர்களும் கலந்து கொண்டனர்.

பொது மக்கள், ஊடகங்கள் மற்றும் உத்தியோகத்தரிடையே மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் பற்றிய வெளிப்பாடு தன்மையின் இயலளவினை கட்டியெழுப்பும் நோக்கில் இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

உலக வங்கியின் அனுசரணையில் நடைபெறும் இச்செயற் திட்டத்தில் கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

இன்று இதுவரை காலமும் நடைபெற்றுவந்த வரவுசெலவுத்திட்ட வெளிப்படைத்தன்மை குறித்த கலந்துரையாடல்கள் செயலமர்வுகளுடன், எதிர்காலச் செயற்பாடுகள் குறறித்தும் கலந்துரையாடப்பட்டு, எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டிய வருமான ஈட்டுவதற்கான முறைகள், மற்றும் செலவீனங்களின் தன்மை, ஒதுக்கம்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .