2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

காத்தான்குடியில் அனர்த்த முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி இயங்கவில்லை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (எம்.சுக்ரி)
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவின் புதிய காத்தான்குடியிலுள்ள  அனர்த்த முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவி இயங்கவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலுள்ள  அனர்த்த முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கோபுரங்களின் மூலம் சூறாவளி முன்னெச்சரிக்கை அறிவித்தல் நேற்று மாலை விடுக்கப்பட்டது.

எனினும் புதிய காத்தான்குடியிலுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கோபுரத்திலுள்ள கருவி இயங்காததால் இங்கு அந்த அறிவித்தல் விடுக்கப்படவில்லை. இது தொடர்பில் ஆராய்து பார்த்த போது கோபுரம் இயங்காதது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக பரிசிலினை செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .