2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மட்டு, தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்ட தாதியர்கள் இன்று நண்பகல் முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான தாதியர்கள் பங்கு கொண்டனர்.

மேலதிக நேர வேலை வழங்கல், 5 நாட்கள் மட்டும் வேலை செய்தல் உட்பட 23 கோரிக்கைகள் முன்வைத்தே ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்க இணைதேசிய அமைப்பாளர் கே.ஜனதீபன் தெரிவித்தார்.

இவ் ஆர்ப்பாட்டத்தின்போது, தொலைபேசி கொடுப்பனவு 4000 ரூபாவை உடனே வழங்கு, தெளிவு படுத்தப்பட்ட தாதியருக்கான பதவி நிலைச் சுற்றறிக்கையை வெளியிடு, கொடுப்பனவுகளை வழங்கும் போது சகல ஊழியர்களையும் சமமாக கவனி போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.
 








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .