2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண உள்ளூராட்சி செயலாற்றுகை போட்டியில் மட்டக்களப்பு மாநகர சபை முதலிடம்

Super User   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாண உள்ளூராட்சி செயலாற்றுகை போட்டியில் மட்டக்களப்பு மாநகர சபை முதலாவது இடத்தை பெற்றுள்ளது என கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார் அறிவித்துள்ளார்.

இந்த போட்டி கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தினால் 2011ஆம் ஆண்டு மாகாண மட்டத்தில் நடத்தியமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்திலுள்ள மாநகர சபைகள் மற்றும் நகர சபைகள், பிரதேச சபைகள் என்பவற்றுக்கிடையே  இப்போட்டி நடத்தப்பட்டது.

இதில் நகர சபைகளில் காத்தான்குடி நகர சபை முதலாவது இடத்தையும், பிரதேச சபைகளில்  மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபை முதலாவது இடத்தையும் பெற்றுள்ளது.

இதேவேளை, இரண்டாவது இடத்தினை முறையே மாநகர சபைகளில் கல்முனை மாநகர சபையும் நகர சபைகளில் கிண்ணியா நகர சபையும் உகண பிரதேச சபையும் கைப்பற்றியது. அத்துடன் இந்த போட்டியில் மூன்றாவது இடத்தினை திருகோணமலை நகர சபையும் மண்முனை தென் - எருவில் பற்று பிரதேச சபையும் பெற்றுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .