2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

படையினரின் இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2012 நவம்பர் 01 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

இரத்த வங்கியில் ஏற்பட்ட இரத்த தட்டுப்பாட்டை அடுத்து அதனை நிவர்த்தி செய்யும் முகமாக நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு தாண்டியடி வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச்.வி.எம்.ஏ.கருணாரத்ன தலைமையில், முகாம் துணைப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பிரேமச்சந்திரவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான முகாமில், நூற்றுக்கணக்கான படையினர் இரத்ததானம் செய்தனர்.

இதன்போது பெற்றப்பட்ட இரத்தமானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .