2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

இஸ்லாமிய நூதனசாலைக்கான நிர்மாண வேலைகளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பார்வை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் அமையவுள்ள இலங்கையில் முதலாவது இஸ்லாமிய நூதனசாலைக்கான கட்டிட நிர்மாண வேலைகளை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்கும் நேற்று சனிக்கிழமை பார்வையிட்டனர்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் முயற்சியால் இஸ்லாமிய நூதனசாலைக் கட்டிடம் ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகின்றது.

இந்நூதனசாலைக்கான கட்டிட நிர்மாண வேலைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதன்போது பணித்தார்.

இஸ்லாமிய நூதனசாலையில் வைப்பதற்காக 1920ஆம் ஆண்டு காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்ற திருமணத்தின்போது, மணப்பெண் பாவித்த சாரியும் மணமகன் அணிந்த தொப்பியும் பாத்திரமும் பிரதியமைச்சரிடம் ஓய்வுபெற்ற றஹீம் ஆசியர் என்பவர் வழங்கினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .