2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டது

Kogilavani   / 2012 நவம்பர் 05 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
 
மட்டக்களப்பில் இன்று நடைபெறவிருந்த மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் ஜனாதிபதியின் அவசர அழைப்பில் கொழும்பு சென்றதால் இன்று நடைபெறவிருந்த அபிவிருத்திக்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
 
இக் கூட்டம் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .