2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

வாவிகளின் நீர் மட்டம் உயர்வு

Super User   / 2012 நவம்பர் 28 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

நாட்டின் பல பகுதிகளில் தற்போது பெய்து வருகின்ற மழையினால் பெரும்பாலன குளங்களின் நீர் மட்டங்கள் உயர்வடைந்துள்ளன.

இதனால் குளங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களிலுள்ள வாவிகளின் நீர் மட்டம் கடந்த இரண்டு தினங்களாக உயர்வடைந்துள்ளது என பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் படுவான்கரை வயல் பிரதேசங்களில் இருந்து வாவிக்கு நீரினாலேயே வாவியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டனர். வாவிகளின் நீர் மட்டம் சுமார் இரண்டரை அடி வரை உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் காத்தான்குடி வாவியில் சிறிய மீன்பிடி தோணிகளை கரையில் நிறுத்த முடியாமல் வாவியின் வீpதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, முகத்துவாரம் வெட்டப்பட்டு நீர் ஓடுமாயின் இந்த வாவிகளின் நீர் மட்டம் குறைவடையும் என மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .