2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் புன்னக்குடா வீதி சேதமடைந்து காணப்படுவதால் மக்கள் விசனம்

Kogilavani   / 2012 நவம்பர் 29 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அரசாங்க நிறுவனங்கள் மற்றும் முக்கிய தொழிலிடங்களுக்குச் செல்வதற்கான வழியாகப் பயன்படும் ஏறாவூர் புன்னக்குடா வீதியானது மிகவும் சேதமடைந்து, நீர் தேங்கிக் காணப்படுவதால் இவ் வீதியால் பயணிப்போர் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர் மணிக்கூட்டுச் சந்தியிலிருந்து ஆரம்பமாகும் புன்னக்கூடா வீதியில் பிரதான சந்தை, இலங்கை வங்கி, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகம், அல் ஜிப்ரியா மகா வித்தியாலயம், அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட மிக முக்கிய இடங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, அல் ஜிப்ரியா மகா வித்தியாலயத்துக்குச் செல்லும் மாணவர்கள் வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாகத் தேங்கிக் கிடக்கும் அழுக்கு நீரைக் கடந்தே பயணிக்க வேண்டியுள்ளது.

மழைக் காலம் ஆரம்பித்துள்ளதால் மேற்படி புன்னக்கூடா வீதியானது சேறும் சகதியும் வெள்ளமும் கொண்ட வீதியாக மாறியுள்ளது.

எனவே, இந்த வீதியினை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


                                                                                                                                                                                                                                                   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .