2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

'புலமை' சிறப்பு மலர் வெளியீடும் பாராட்டு விழாவும்

Kogilavani   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்தின் 'புலமை' சிறப்பு மலர் வெளியீடும் சாதனையாளர் பாராட்டு விழாவும் நேற்று வெள்ளிக்கிழமை; களுதாவளை மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற ஆணையாளரும் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியுமான பொன்னையா சுவர்ணராஜ், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் கு.சுகுணன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், பட்டிருப்பு கல்வி வலயத்தின் சாதனைகளை உள்ளடக்கிய 'புலமை' நூல் வெளியிடப்பட்டதுடன் மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் தமது திறமைகளை வெளிக்காட்டி சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பட்டிருப்பு கல்வி வலயத்தில் சுமார் 68 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் சுமார் 25000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மாணவர்களை கல்வியில் ஊக்கப்படுத்தவும் மாணவர்கள் சாதனைகளை படைக்கவுமே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டன.

இதேவேளை, பட்டிருப்பு கல்வி வலயத்தில் கடந்த காலங்களில் கல்விச்சேவையாற்றி ஓய்வுபெற்றவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .