2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

ஓட்டமாவடியிலும் கோறளைப்பற்று மத்தியிலும் திவிநெகும தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 18 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


'வறுமையற்றதோர் இலங்கையை கட்டியெழுப்புதல்' என்ற விடயத்திற்கமையவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமையவும் திவிநெகும (வாழ்வின் எழுச்சி) வேலைத்திட்டத்தை மேலும் பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான அறிவூட்டல் நிகழ்வுகள் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுகளில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றன.

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான கூட்டங்கள் அப்பிரதேச செயலகப் பிரிவு கேட்போர் கூடங்களில் நடைபெற்றன. 

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பசீர் சேகுதாவூத், பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார், ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர்களான எஸ்.ஏ.றியாஸ், எச்.எம்.எம்.றுவைத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X