2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மட்டக்களப்புக்கு அமைச்சர் டலஸ் அழகபெரும விஜயம்

Kogilavani   / 2013 ஜனவரி 24 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி,-ஜவீந்திரா 


பாடசாலையை விட்டு விலகிய இளைஞர் யுவதிகளின் திறன் அபிவிருத்தி பாடநெறி தொடர்பான செயலமர்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இச்செயலமர்வினை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் தேசிய மனிதவள அபிவிருத்தி மன்றத்தினால் நடாத்தப்பட்ட இச் செயலமர்வில் தேசிய கைத்தொழில் அதிகார சபையின் தலைவர் விஜேவிக்ரமரட்ண, சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர், தொழிற்பயிற்சி அதிகார சபையின் பணிப்பாளர் ரணவீர, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா உட்பட அமைச்சின் அதிகாரிகள், பெருந்தொகையான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .