2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வாகனம் ஆற்றில் வீழ்ந்து விபத்து; 20 பேர் காப்பாற்றப்பட்டனர்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 25 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், ஜதுசன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுப்புப் பாலத்தின் கீழாகவுள்ள ஆற்றில் வாகனமொன்று வீழ்ந்துள்ளது. இருப்பினும் அவ்வாகனத்தில் பயணம் செய்த 20 பேரும்  காப்பற்றப்பட்டுள்ளனர்.

அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்திலிருந்து அநுராதபுரத்தில் திருமண வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தவர்களின் டொல்பின் ரக வாகனமே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆற்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.

இவ்வாகனத்தில் பயணித்த 20 பேரும் உயிர் ஆபத்தின்றி வெல்லாவெளிப் பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.   எவரும்  பாரதூரமாக காயமடையவில்லையெனவும் வெல்லாவெளி பொலிஸார் கூறினர். 

எனினும் ஆற்றில் விழுந்த வாகனத்தை மீட்கமுடியவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்துத்  தொடர்பான விசாரணையை வெல்லாவெளிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .