2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

எல்லை நிர்ணய கூட்டம் தீர்மானமின்றி முடிவு

Kogilavani   / 2013 ஜனவரி 25 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி, கே.எஸ்.வதனகுமார்

மட்டக்களப்பு, கல்குடா தொகுதியிலுள்ள பிரதேச செயலக எல்லைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை தீர்ப்பதற்காக நடைபெற்ற கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி கலைந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள ஒரு சில கிராம சேவகர் பிரிவுகளை ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகங்களுடன் இணைப்பது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தீர்ப்பதற்காக நாடாளுமன்ற கட்டிடத்தில் பொது நிரவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் நேற்று கூட்டமொன்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்ததை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் ஷேகுதாவூத், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கே.துரைராஜசிங்கம், முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் அருன் தம்பி முத்து மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வாகரை பிரதேச செயலளார் எஸ்.ராகுலநாயகி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார், வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி திணேஸ், கிரான் பிரதேச செயலாளர் தணபால சிங்கம்,; உட்பட எல்லை நிர்ணயக்குழு அதிகாரிகள் பொது நிருவாக உள் நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது இரண்டும் தரப்பும் தத்தமது நியாங்களையும் வாதங்களையும் முன் வைத்தனர். இரண்டு தரப்புக்களும் எழுத்து மூலமாகவும் வாய் மொழி மூலமாகவும் முன் வைத்த அறிக்கைகளை அமைச்சர் ஜோன் செனவிரட்ன உள்ளிட்ட அதிகாரிகள் கேட்டறிந்து கொண்டனர்.
எனினும் இந்த கூட்டம் எந்தவித தீர்மானமுமின்றி முடிவடைந்துள்ளது.

மீண்டும் ஒரு கூட்டம் இது தொடர்பில் நடாத்தப்படுமென அமைச்சர் ஜோன் செனவிரட்ன கூறியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .