2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

காத்தான்குடியில் பாம்பு மழை

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 25 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

காத்தான்குடி 6ஆம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இப்பாம்பு மழை பெய்துள்ளது. காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலும்  ஜன்னத் மாவத்தையிலுள்ள வீட்டு வளாகமொன்றிலுமே இப்பாம்பு மழை பெய்துள்ளது.

தான் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது மழையுடன் சேர்ந்து இரண்டு பாம்புகள் வந்து விழுந்ததாகவும் அதில் ஒரு பாம்பு தனது தோள் மீது விழுந்து ஓடியதாகவும் ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்ணொருவர் கூறினார்.

இப்பாம்புகள் எந்த இனத்தை சேர்ந்த பாம்புகளென்பது பற்றி தங்களுக்கு தெரியாதெனவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

  Comments - 0

  • IBNU ABOO. Friday, 25 January 2013 12:48 PM

    கலர் மழை, மீன்மழை. இப்போ பாம்புமழை. நாட்டின் பஞ்சத்தில் பன காசு மழை பொழியாதா?

    Reply : 0       0

    sujath akkaripathu Saturday, 26 January 2013 05:36 AM

    பாவம் செய்தால் அப்படித்தான் நடக்கும்.

    Reply : 0       0

    aj Saturday, 26 January 2013 07:23 AM

    மற்ற இனத்தவர்களுக்கு செய்த பாவம்

    Reply : 0       0

    saja Saturday, 26 January 2013 09:34 AM

    எதுமற்ற இனத்தவர்களுக்கு செய்த பாவம்? பள்ளியில் தொழுதுகொண்டிருந்த பொதுமக்களை காட்டுமிராண்டி தனமாக சுட்டு கொண்டதை விடவும் கேவலமான செயலை செய்த பாவத்திற்கா..... சும்மா போங்க வா aj...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .