2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 ஜனவரி 26 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உலர் உணவுப்பொருட்களை வழங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

கடந்த 24.1.2013 வியாழக்கிழமையன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, நாடாளுமன்றத்தில் வைத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்து மட்டக்களப்ப மாவட்டத்தில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி உலர் உணவுப்பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இரண்டு வாரங்களுக்கு போதுமான உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பல தடவைகள் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளத்தினால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சிறுதொழில் முயற்சியாளர்கள் கூலித்தொழிலாளார்கள் என பலரும் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க உத்தியோகத்தர்கள் பலரின் வீடுகள் கூட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அமைச்சர் மஹிந்த அமரவிரவிடம் சுட்டிக்காட்டினார்.

இதன் போது அமைச்சின் செயலாளர் ஜனாபா முகம்மட் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும் சமூகமளித்திருந்ததாகவும் இவர்களுக்கு வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .