2026 மே 01, வெள்ளிக்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி

Kogilavani   / 2013 ஜனவரி 27 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் நபர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேயனோடையை சேர்ந்த இப்றாலெவ்வை முஸ்த்தபா லெவ்வை (65) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வயோதிபர் பயணித்த துவிச்சக்கர வண்டி மீது கார் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .