2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2013 ஜனவரி 28 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான்குளம் பிரதேச காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸார் கடந்த சனிக்கிழமை மீட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் புலானாய்வு அதிகாரி எம்.தாஹாவுக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர், கிரான்குளம் பிரதேச காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளனர்.

ஒரு மிதிவெடியும், இரண்டு குண்டுகளும் இதன்போது மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .