2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

'கொக்கட்டிச்சோலை படுகொலை' நினைவுதினத்தை கலாசார மண்டபத்தில் நடத்துவதற்கு அனுமதி மறுப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 29 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


கொக்கட்டிச்சோலை படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்;று கொக்கட்டிச்சோலை ஆலய முன்றலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நினைவு தின நிகழ்வை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூரணப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 1.30 மணியளவில் வந்த பாதுகாப்புத் தரப்பினர்; கலாசார மண்டபத்தில் நினைவு தினத்தை நடத்துவதற்கான அனுமதியை மறுத்தததுடன்; மண்டபத்தினுள் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு மண்டப கதவுகள் பூட்டியதாக  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையிலேயே ஆலய முன்றலில் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ஆலய சுற்றுப்புறத்தில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 1987.01.28 ஆம் ஆண்டு மண்முனைத் துறைக்கு அண்மையில் இயங்கிய இறால் வளர்ப்புப் பண்ணையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவமொன்றில் ஆண்,பெண் உள்ளிட்ட 65 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டிப்பளைப் பிரதேசக் கிளை ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்;ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், மா.நடராசா, கருணாகரன்(ஜனா), இரா.துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார், இராசரெட்ணம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .