2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

தேசியமட்ட இஸ்லாமிய கலாசாரக் கண்காட்சிக்கான அலுவலகம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 29 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


 -எம்.சுக்ரி


காத்தான்குடியில் நடைபெறவுள்ள தேசியமட்ட இஸ்லாமிய கலாசாரக் கண்காட்சிக்கான அலுவலகம் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலாளரும் கண்காட்சி ஏற்பாட்டுக்குழு தலைவருமான எஸ்.எச்.முஸம்மில் அலுவலகத்தை திறந்துவைத்துள்ளதுடன், கலாசார கண்காட்சி தொடர்பான வேலைகளையும் அவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச கலாசார அபிவிருத்தி உதவியாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பசீர் மதனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை முஸ்லிம்களின் தொன்மை, வரலாறு, வாழ்வியல், உள்ளிட்ட கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் கிழக்கின் முதலாவது கலாசாரக் கண்காட்சி இதுவாகும். 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் 2ஆம் 3ஆம் திகதிகளில் காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .