2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

கடலில் குளிப்பதற்காக சென்று காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

Kogilavani   / 2013 ஜனவரி 30 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி கடலில் குளிப்பதற்காக சென்று காணாமல் போன மாணவன் நேற்று மாலை மட்டக்களப்பு பூநொச்சிமுனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜெகநாதன் டிலுஸ்காந் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்மாணவன் நேற்று முன்தினம் கடலில் குளிப்பதற்காக சென்று காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம்  தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .