2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

அஸ்ஹர் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஜனவரி 30 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஸரீபா


வாழைச்சேனை, பிறைந்தநை;துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக் கோரி மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த எட்டு வருட காலமாக இந்த பாடசாலையின் அதிபராக கடமையாற்றி வரும் எம்.எஸ்.சுபைதீன் ஜனாதிபதியினால் சிறந்த அதிபருக்கான 'பிரதீபா பிரபா' எனும் விருதினையும் பெற்றவராவார்.

கடந்த 08 வருட காலங்களுக்கு முன்னர் கல்வி மற்றும் பௌதீக வளங்களில் பின்தங்கியிருந்த இப்பாடசாலை, தற்போதைய அதிபர் நியமிக்கப்பட்டதில் இருந்து கல்வியில் சிறந்த பெருபேருகளைப் பெற்று வருவதோடு பௌதீக வளத் தேவைகளையும் பாடசாலை தன்னிரைவு கண்டுள்ளது.

இவரது காலத்திலேயே பாடசாலை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு முன்னிலைப் பாடசாலையாகத் திகழ்வதையிட்டு கண்டி, நுவரெலியா, கொழும்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் வருகை தந்து பார்வையிடும் அளவுக்கு இந்தப் பாடசாலையின் கட்டமைப்பினை ஏற்படுத்தி மாவட்டத்தில் ஏனைய பாடசாலைகளுக்கு முன்னுதாரனமான பாடசாலையாக இப் பாடசாலை திகழ்ந்து வருகின்றது.

இந்த வேளையில் இப்பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்திருப்பது தொடர்பில் பெற்றோர்கள் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.அமீர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.சுபைர் ஆகியோர் ஸ்தலத்திற்குச் சென்று பெற்றோர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

இது தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளரோடு தொடர்பு கொண்டு சுமுகமான தீர்வினைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்களது ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.இந்த பாடசாலையில் சுமார் 750 மாணவிகளும் 32 ஆசிரியர்களும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .