2026 மே 01, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதார பொதிகள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 31 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்கென இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் சுகாதார பொதிகள் நேற்று மாலை கையளிக்கப்பட்டன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளையின் வேண்டுகோளின் பேரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் இந்த சுகாதார பொதிகள்; வழங்கப்பட்டன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் உப தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா இந்த சுகாதார பொதிகளை காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தரிடம் நேற்று மாலை கையளித்தார்.

இவை காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .