2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

காணாமல் போன மீனவரை தேடும் பணி முன்னெடுப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பில் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற மீனவரொருவர் கடலில் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். 

தெய்வநாயகம் (வயது 43) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்குடாக் கடலிலேயே நேற்று சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்குடா பிரதேசத்திலிருந்து தோணியொன்றில் இவர் கடலுக்குச் சென்ற வேளையில் வீசிய கடுமையான காற்று காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன இம்மீனவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .