2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மின்னல் தாக்கி விவசாயி பலி

Super User   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஸரீபா

மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி ஓட்டமாவடி, மீராவோடையை சேர்ந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீயான்குள பகுதியில்  இன்று திங்கட்கிழமை அதிகாலை 04 மணியளவில் மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி,  மீராவோடை - ஹாஜியார் வீதியைச் சேர்ந்த எம்.எம்.சீனிமுகம்மது என்ற விவசாயியே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கிளை முகாமையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற இவர் வாகரை – மீயான்குளப் பகுதியில் வேளான்மைச் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மின்னல் தாக்குதலுக்கு உள்ளானவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கைளிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .