2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மட்டு. மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்

Super User   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு மாவட்டத்தின் 2013ஆம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி குழுக்  கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலாசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது கடந்த வருட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் இவ்வாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி கல்துரையாடப்பட்டன.

திவிநெகும, சமுர்த்தி விவசாயம், சுகாதாரம், கல்வி, மீன்பிடி உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .