2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

ஆசிரியரின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி தொழிற்பயிற்சி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவீந்திரா


களுவாஞ்சிகுடி தொழிற் பயிற்சி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியரின் இடமாற்றத்தை நிறுத்தக் கோரி களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்சி நிலையத்தின் மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஈடுபட்டதுடன் கோரிக்கையொன்றினையும் விடுத்துள்ளனர்.

மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

களுவாஞ்சிகுடி தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக மின்னியல் பாடநெறியானது பாரிய குறைபாடுகளுடன் போதிக்கப்பட்டு வந்தது.  அதில் ஐந்திற்கும் குறைந்த மாணவர்களின், ஒழுங்கீனமான வரவு மாத்திரமே பெறுபேறாக இருந்தது.

இதுவரை ஓரு மாணவரேனும் பயிற்சி நெறியை முறையாக பூர்த்தி செய்து சான்றிதழ் பெற்று வெளியேறியதில்லை. இந்நிலமை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வரப்பட்டதன் பின்னர் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.

புதிய ஆசிரியர் எஸ்.புலேந்திரனின் ; வருகையை அடுத்து அவர் அதிகளவான மாணவர்களை இணைந்து மின்னியல் பாடநெறியை ஆர்வமாக தொடர்ந்தனர். இந்நிலையில் பின்னர் அப்புதிய ஆசிரியரை திடீரென இடமாற்றி புதிய ஒருவரை நியமித்தனர். இது சில அதிகாரிகளின் தனிப்பட்ட குரோதமான நடவடிக்கையே என்பது நன்கு புலப்படுகிறது.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாத மாணவர்களாகிய நாங்கள் ஆசிரியர் எஸ்.புலேந்திரன் குறித்த பாடநெறியை கற்பிக்க வேண்டுமென பலமுறை கேட்டும் அவற்றுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு இதுவரை கிட்டாத நிலையில்.

 மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றினைந்து புதிய ஆசிரியர் வேண்டாம் என்றும், அதிகாரிகளின் இவ்வாறான வஞ்சகமான நடவடிக்கைகளை நிறுத்த கோரியும் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு பதாதைகளுடன் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரின் கவனத்திற்கும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

விரைவாக இது குறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்ற பிரதேச செயலாளர் அவர்களின் உறுதிமொழியை அடுத்து நாங்கள்; கலைந்து சென்றுள்ளோம். மாணவர்களாகிய எங்களின் தீர்மானாம், எமது கோரிக்கை போன்றன நிறைவேற்றப் படாதவிடத்து நாங்கள் கற்றுக் கொண்டிருக்கும் பாடநெறியை கைவிட்டு வெளியேறுவது எனத் தீர்மானித்துள்ளோம்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .