2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

காத்தான்குடி பொலிஸாரின் நடமாடும் சேவை நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி பொலிஸாரின் நடமாடும் பொலிஸ் நிலையம் கல்லடி வேலூர் பத்திரம்மன் ஆலயக் கட்டிடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோன், மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலன் சில்வா, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா, காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும்; கிராம உத்தியோகஸ்தர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், பொலிஸ் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொலிஸ் நடமாடும் சேவையின் மூலம் பொதுமக்கள் தங்களது தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியுமென காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா தெரிவித்தார்.

எதிர்வரும் 27ஆம் திகதிவரை இந்த பொலிஸ் நடமாடும் சேவை செயற்படுமெனவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .