2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

போரில் மரணித்த பொதுமக்களுக்காக சர்வமத பிரார்த்தனை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 15 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்

கடந்த கால போர், வன்முறைகளால் காணாமல் போனவர்கள், மரணித்தவர்களுக்கான சர்வமத பிரார்த்தனை நிகழ்வொன்று கரித்தாஸ் எகெட் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

எகெட் கரித்தாஸ் பணிப்பாளர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வந்தனைக்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை, மட்டக்களப்பு பெரிய பள்ளிவாயல் மௌலவி எம்.எம்.நளீம் பலாஹி, மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர் அருட்தந்தை ரி.ஜூலியன்,  பல்சமய ஒன்றிய செயலாளர் விஷ்ணுமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சர்வமத பிரார்த்தனையை யேசு சபைத் துறவி அருட்தந்தை போல் சற்குணநாயகம், எகெட் நிறுவக உத்தியோகத்தர், எஸ்.பத்மநாதன் ஆகியோர் நெறிப்படுத்தினர். கடந்த கால போர், வன்முறைகளால் காணாமல் போனவர்கள், மரணித்தவர்களின் உறவனர்கள் துன்பங்கள் துயரங்களை ஆறுதல் படுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை, காத்தான்குடி, கல்லடி வேலூர், மைலம்பாவெளி, வவுணதீவு உள்ளிட்ட இடங்களிலிருந்து தமிழ் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதிக் கட்டமாக தங்களது உறவுகளை நினைத்து நினைவுச் சுடர்களை ஏற்றி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .