2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 பெப்ரவரி 16 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


தொழிற்பயிற்சி மற்றும் நிவாரண சேவை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளை நிறைவு செய்த மட்டக்களப்பு, கிரான், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் மற்றும் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று தன்னாமுனை மியானி மண்டபத்தில் நடைபெற்றது.

குழாய் பொருத்துதல், வீட்டு மின் இணைப்பு, மேசன் பயிற்சி மற்றும் உணவு பதனிடல், சுற்றுலாத்துறைகளை கவரும் வகையிலான சிறிய ரக அலங்காரப் பொருள்கள் தயாரித்தல் ஆகிய பயிற்சிகளை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளும் சமுர்த்தி, திவிநெகும, கிராமசேவை, நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியை பெற்றவர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் சிறிலங்கா நிறுவனத்தினால் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சிகளில் 50 இளைஞர் யுவதிகளும் 20 அரச உத்தியோகத்தர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் பிராந்திய திட்ட முகாமையாளர் பிலிப் பீலி, இப் சிறிலங்கா நிறுவனத்தின் மட்டக்களப்பு பிரதிநிதி நிம்சார்ட் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .