2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

அரச காணி நெருக்கடி தொடர்பான சட்ட ஆலோசனை வழங்கும் நடமாடும் சேவை

Kogilavani   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


அரச காணி நெருக்கடி தொடர்பான சட்ட ஆலோசனை வழங்கும் நடமாடும் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

அரச காணிகளில் வசிப்பவர்கள் அவர்களின் காணி உரிமை தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வுகானும் வகையில் சட்ட ஆலோசனை வழங்கும் வகையில் இவர்களுக்கான இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.

நேர்மையின் புகலிடம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் சட்ட ஆலாசகர் எப்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நடமாமும் சேவையில் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அரச காணிகளில் வசிப்பவர்கள் அவர்களின் காணி உரிமை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்கள் தொடர்பாக இதன்போது சட்டத்தரணிகளாலும் அதிகாரிகளினாலும் ஆலோசணைகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .