2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

யானை தாக்கி பெண் மரணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பில் பட்டப்பகல் வேளையில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உப்பூறல் கிராமத்திலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உப்பூறல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசா பூமணி (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிராமவாசிகள் இந்த யானையை மிரட்டியபோது களப்புப் பக்கமாக ஓடிவந்த இந்த யானை உப்பூறல் களப்பில்  இறால் பிடித்துக்கொண்டிருந்த இந்தப் பெண்ணை தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட உறவினர்கள் களப்புப் பக்கம் சென்று பார்த்தபோது இந்தப் பெண் உயிரிழந்து காணப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

சடலம் கல்லாம்பத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .