2026 மே 06, புதன்கிழமை

யானை தாக்குதல்களிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 மார்ச் 20 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான வெலிக்காகண்டி கிராம மக்கள் யானைகளின் தாக்குதல்களிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பின் மிகவும் பின் தங்கிய எல்லைக் கிராமமான வெலிக்காகண்டி கிராமம் கடந்த யுத்த அனர்;தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது மீளக்குடியமர்த்தப்பட்ட ஒரு கிராமமாகும்.

இக்கிராமத்தில் 57 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்குள் யானைகள் நாளாந்தம் புகுந்து அட்டகாசம் செய்து வருவதுடன் இந்த கிராமத்தில் இது வரைக்கும் 5 பேர் யானைகளின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன
யானைகளின் அட்டகாசத்தினால் தாம் அச்சத்துடன் வாழ்வதாகவும் உடனடியாக யானைகளின் தாக்குதல்களிலிருந்து தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கிராமத்திலிருந்து பஸ் வண்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த மக்கள் மாவட்ட செயலகத்தின் வாவியோரமாக அமர்ந்திருந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.







  Comments - 0

  • vallarasu Thursday, 21 March 2013 07:05 AM

    இவைகளைப்பார்க்க மாட்டார்கள், ஆனால் யானை உடைத்த வீடுகளுக்கு தகடு தருவதற்கு மட்டும் வருவார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .