2026 மே 06, புதன்கிழமை

கிரான் ப.நோ.கூ.சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 மே 19 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கிரான் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உபதலைவர் கே.உமாபதி தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்து கொண்டார்.  அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.கனகசுந்தரம் உட்பட மேலும் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் கிரான், குடும்பிமலை, தேவபுரம், ஊத்துச்சேனை போன்ற விவசாயக் கிராமங்களும் கிரான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மீனவ தொழிலாளர்களும் நன்மையடைவார்கள் கிரான் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உபதலைவர் கே.உமாபதி தெரிவித்தார்.



  Comments - 0

  • vallarasu Sunday, 19 May 2013 07:41 AM

    அமைச்சர் ஐயா... மாகாணசபை அமைச்சர் ஒருவர் தனது ஊருக்கு இதைவிட ப‌ல மடங்கு சேவை செய்தார். ஆனால் தேர்தலின்போது அந்த ஊர் மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிக்கு வாக்களித்த சம்பவம் ஒன்றை உங்களுக்கு நினைவுபடுத்தி உள்ளேன்..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .