2026 மே 06, புதன்கிழமை

இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 22 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


வெசாக் வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 2 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இன்று புதன்கிழமை அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து பெருமளவான கசிப்பு, 300 லீற்றர் கோடா, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரனின் தலைமையிலான மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வட்டவான் அடர்ந்த காட்டுப் பகுதியிலேயே இந்;தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்களை ஏறாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .