2026 மே 06, புதன்கிழமை

சட்டவிரோத மரக்குற்றிகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 24 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பெருமளவான மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் நேற்று வியாழக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போதே  சட்டவிரோத மரக்குற்றிகளுடன், சந்தேக நபர்கள் இருவரையும் காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அனுமதிப்பத்திரம் பெற்ற மரக்குற்றிகளுக்கு நடுவில் சட்டவிரோத மரக்குற்றிகளை மறைத்து வைத்து கொண்டுவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளுடன் சந்தேக நபர்கள் இருவரையும்; மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .