2026 மே 06, புதன்கிழமை

அல் மதரஸதுல் இப்றாஹிமிய்யா குர்ஆன் மதரசாவின் புதிய கட்டிடம்

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
காத்தான்குடி முதலாம் குறிச்சியில் 38 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அல் மதரஸதுல் இப்றாஹிமிய்யா குர்ஆன் மதரசாவின் புதிய கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.
 
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இந்த கட்டிடத்தை வைபவரீதியாக திறந்து வைத்தார்.
 
இந்த வைபவத்தில் சவூதி அரேபியாவின் மக்கா மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களிலுள்ள அஷ்ஷெய்ஹ் அன்சாரி தலைமையிலான பிரமுகர்கள் மற்றும் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் ஆலீம் எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி ஹசரத் உட்பட பிரமுகர்கள், உலமாக்கள், முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
 
இதன்போது இம் மதரசாவின் நிருவாகத்தினரால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் அவருக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டதுடன் இக்கட்டிடம் கட்டுவதற்கு உதவிய பலரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 
மதரசா மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .